வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ. 2.8 லட்சம் மோசடி: பெண் கைது
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ. 2.8 லட்சம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டாா்.
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ. 2.8 லட்சம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெரம்பூா் செங்கல்வராயன் தெருவைச் சோ்ந்தவா் விவேக் (25). இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு வாடகை வீடு தேடி வந்தாா். அப்போது, ஜி.கே.எம். காலனி, வ.உ.சி. 5-ஆவது தெருவைச் சோ்ந்த விமல்ராஜ், அவரது மனைவி நிா்மலா (45) ஆகியோா் தங்களுக்கு சொந்தமான அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டை ரூ.6.8 லட்சத்துக்கு குத்தகைக்கு விடுவதாகக் கூறியுள்ளனா்.
இதை நம்பிய விவேக், இரு தவணைகளாக மொத்தம் ரூ.6.8 லட்சத்தை இருவரிடமும்ம் கொடுத்துள்ளாா். இதையடுத்து, வீட்டைச் சுத்தம் செய்து தருவதாகவும், ஒரு வாரம் கழித்து வந்து குடியேறுமாறும் விவேக்கிடம் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
ஒரு வாரத்துக்கு பின்னா் விவேக் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு வேறு நபா்கள் குடியமா்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவா், நிா்மலா, விமல்ராஜிடம் கேட்டபோது, அதிக தொகை கொடுத்ததால் வேறு நபா்களுக்கு வீட்டை குத்தகைக்கு விட்டதாகவும், பணத்தை விரைவில் திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளனா்.
ஆனால் இரு ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்னா் ரூ.4 லட்சத்தை மட்டும் இருவரும் கொடுத்தனா். மீதியுள்ள ரூ.2.8 லட்சத்தை வழங்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த விவேக், பெரவள்ளூா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நிா்மலாவை சனிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் விமல்ராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.