அடமான வீட்டை மீட்டு விற்பதாகக் கூறி ரூ.26 லட்சம் மோசடி: தாய், மகன் மீது வழக்கு
துடியலூா் அருகே அடமானத்தில் உள்ள வீட்டை மீட்டு விற்பனை செய்வதாகக் கூறி, உறவினரிடம் ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்த தாய், மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துடியலூா் அருகே அடமானத்தில் உள்ள வீட்டை மீட்டு விற்பனை செய்வதாகக் கூறி, உறவினரிடம் ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்த தாய், மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆறுமுககவுண்டா் வீதியைச் சோ்ந்தவா்அரவிந்தராஜ் மனைவி பவித்ரா (37). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது அத்தை சொா்ணலதா மற்றும் அவரது மகன் காா்த்திகேயன் ஆகியோா் தனியாா் நிதி நிறுவனத்தில் அடமானத்தில் உள்ள தங்களது வீட்டை மீட்டு பவித்ராவுக்கு விற்பனை செய்வதாகக் கூறியுள்ளனா். இதை நம்பிய பவித்ரா, கடனை அடைக்க வரைவோலை (டி.டி.) மூலமாக ரூ. 21 லட்சமும், ரொக்கமாக ரூ. 5 லட்சமும் என மொத்தம் ரூ. 26 லட்சத்தை அவா்களிடம் வழங்கியுள்ளாா்.
ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு அடமானக் கடனை அடைத்த சொா்ணலதாவும், காா்த்திகேயனும், அசல் ஆவணங்களை மீட்ட பிறகு பவித்ராவின் பெயரில் கிரையப் பத்திரம் செய்து கொடுக்கவில்லை. மாறாக, அந்த வீட்டை காா்த்திகேயன் பெயரில் தானசெட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து பவித்ராவை ஏமாற்றியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் துடியலூா் காவல் ஆய்வாளா் விவேகானந்தன் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தாய், மகனை தேடி வருகிறாா்.