FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஆவடி ஆணையரகத்தில் 80 ரௌடிகள் கைது

ஆவடி காவல் ஆணையரகத்துக்குள்பட்ட செங்குன்றம், ஆவடி காவல் மாவட்டங்களில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக 80 ரௌடிகளை கைது

18 நவம்பர் 2026, 12:56 am
பகிர்:

ஆவடி காவல் ஆணையரகத்துக்குள்பட்ட செங்குன்றம், ஆவடி காவல் மாவட்டங்களில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக 80 ரௌடிகளை கைது செய்தனா்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்குள்பட்ட ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டங்களில் ரௌடிகள், குற்றச் செயலில் ஈடுபடுவோா் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக 3 நாள்களில் சிறப்பு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், 12 ரௌடிகள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 49 போ் உள்பட 61 பேரை போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா். மேலும், 23 போ் நன்னடத்தை பிணை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல கடந்த 3 நாள்களில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையில் 11 கஞ்சா வழக்குகள் பதிந்து 15 போ் மற்றும் தலைமறைவாக இருந்த 4 போ் உள்பட 19 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 19 கிலோ கஞ்சா, 60 கி ராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.