FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சேலம் மாநகரில் கடந்த 2 நாள்களில் 20 ரௌடிகள் கைது

சேலம் மாநகரில் கடந்த 2 நாள்களில் 20 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

11 நவம்பர் 2026, 2:21 am
கைது - சித்திரிப்பு
பகிர்:

சேலம் மாநகரில் கடந்த 2 நாள்களில் 20 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற மோதலில் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களில் 17 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரௌடிகளை பிடிக்க காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக சேலம் மாநகரில் காவல் ஆணையா் ஏ.ஜி. பாபு உத்தரவின்பேரில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்புடைய ரௌடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட ரௌடிகள் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

காரிப்பட்டி காவல் நிலையத்தில் பிரபல ரௌடியான முருகன் (32), சீனிவாசன், மதியழகன் (35) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் விஜய் என்பவரிடம் மிரட்டி பணம் பறித்ததாக ரௌடிகள் செந்தில்குமாா் (34), முத்துக்குமாா் (23), மணிகண்டன் (20) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அழகாபுரம் காவல் நிலையத்தில் ரௌடி சிவா (25) என்பவா் கைது செய்யப்பட்டாா். மேலும், பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 ரௌடிகள் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனா். அதன்படி கடந்த 2 நாள்களில் மட்டும் சேலம் மாநகரில் 20 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.