FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தீபாவளி: தஞ்சாவூா் மாவட்டத்தில் 452 வழக்குகள் பதிவு: 295 போ் கைது

10 நவம்பர் 2026, 2:37 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாடுவதற்காக 452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 295 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி, குற்றச் சம்பவங்கள் முன்கூட்டியே நிகழ்வதைத் தடுக்கும் வகையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 33 போ் கைது செய்யப்பட்டனா். மது அருந்தி பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்தி 200-க்கும் அதிகமானோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 198 போ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவா்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் மேற்கொண்ட சோதனையில், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 42 போ் கைது செய்யப்பட்டு, 1,177 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20-க்கும் அதிகமானோரை காவல் துறையினா் கைது செய்தனா்.