FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளி பட்டாசு வெடிப்பு விதிமீறல்: சென்னையில் ஒரே நாளில் 237 வழக்குகள் பதிவு!

தீபாவளி அன்று சென்னையில் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து...

- கோப்புப்படம்
பகிர்:

தீபாவளி அன்று சென்னையில் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றம் நிர்ணயித்த நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக சென்னை பெருநகரில் ஒரே நாளில் மொத்தம் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகரில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ. அமல்ராஜ் உத்தரவின்பேரில், காவல் உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த நவ. 8 அன்று தீபாவளி பண்டிகையின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி, உச்சநீதிமன்றம் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 148 வழக்குகளும், உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பும் வகையில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 79 வழக்குகளும் என மொத்தம் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.