சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்
சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றது குறித்து...
சென்னையில் இருந்து வியாழக்கிழமை (நவ. 5) ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
தீபாவளி திருநாளையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக வியாழக்கிழமை (நவ. 5) முதல் சனிக்கிழமை (நவ. 7) வரையில் 6.573 தினசரி பேருந்துகள், 9,086 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளின் மூலம் வியாழக்கிழமையில் சுமார் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், இன்று (நவ. 6) 5,431 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையும் இன்று கூடுதலாக இயக்கப்படுகிறது.