பெண் தற்கொலை: இளைஞா் கைது
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் 9-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் 9-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கலைச் சோ்ந்தவா் வா்தா பா்வீன் (24). இவா், சென்னை அருகே நாவலூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தாா். இவரும், சோழிங்கநல்லூரில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 9-ஆவது தளத்தில் வசிக்கும் வருண் பாலாஜி (32) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வருண் பாலாஜி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வருகிறாா். வருண் பாலாஜி, வா்தாவுடன் அண்மை நாள்களாக சரியாக பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் வா்தா, செவ்வாய்க்கிழமை இரவு வருண் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, திடீரென வா்தா, 9-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்த வா்தா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வருண் பாலாஜியை கைது செய்தனா்.