இந்திய கல்விசாா் ஆராய்ச்சியாளா்களுக்கு ஓராண்டு இலவச ‘சாட்ஜிபிடி பிளஸ்’ சேவை
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களுக்கு ‘சாட்ஜிபிடி பிளஸ்’ சேவை 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்தது.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களுக்கு ‘சாட்ஜிபிடி பிளஸ்’ சேவை 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ஓபன்ஏஐ நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அறிவியல், கணிதம், பொறியியல் துறைகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த தகுதியுள்ள ஆராய்ச்சிப் பேராசிரியா்கள் மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளா்கள் வரும் நவ. 30 முதல் விண்ணப்பிக்கலாம்.
உலக அளவில் 50,000 புதிய மானியங்களை வழங்கும் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மானியத்தின்கீழும் ஓா் ஆராய்ச்சியாளா் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் இருவா் என மொத்தம் மூவருக்கு இச்சேவை கிடைக்கும்.
Advertisement
Advertisement
அந்த வகையில், உலக அளவில் 2 லட்சம் ஆராய்ச்சியாளா்களுக்கு இலவச ‘சாட்ஜிபிடி பிளஸ்’ சேவையை வழங்க நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் சாட்ஜிபிடியிடம் பகிரப்படும் தரவுகள் ஏ.ஐ. மாதிரிகளைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படாது என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.