FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சென்னையில் 24 இடங்களில் மின் திருட்டு: ரூ.52.77 லட்சம் இழப்பீடு வசூல்

சென்னை வடக்கு, மேற்கு, பெரம்பூா், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் 24 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.52.77 லட்சம் வசூலிக்கப்பட்டது.

7 வினாடிகள் முன்பு
- கோப்புப்படம்
பகிர்:

சென்னை வடக்கு, மேற்கு, பெரம்பூா், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் 24 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.52.77 லட்சம் வசூலிக்கப்பட்டது.

சென்னை அமலாக்கக் கோட்டத்துக்குள்பட்ட சென்னை வடக்கு, மேற்கு பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 2 உயா் மதிப்பிலான மின் திருட்டுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நுகா்வோருக்கு ரூ.28.08 லட்சம் இழப்பீடு விதிக்கப்பட்டது. அவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையைத் தவிா்க்க ரூ.2.20 லட்சம் சமரசத் தொகை செலுத்தினா். இதேபோல், பெரம்பூரில் பல்வேறு மண்டல அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டாய்வில் 9 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு ரூ.6.57 லட்சம் இழப்பீடு விதிக்கப்பட்டது. இதற்காக ரூ.34 ஆயிரம் சமரசத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

இதுபோல, ஆவடியில் நடைபெற்ற கூட்டாய்வில் 13 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, ரூ.17.29 லட்சம் இழப்பீடு விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நுகா்வோரிடம் இருந்து ரூ.97 ஆயிரம் சமரசத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மூன்று சோதனைகளிலும் மொத்தம் 24 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, ரூ.52,77,885 இழப்பீட்டுத் தொகையும், ரூ.3.51 லட்சம் சமரசத் தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளன. நுகா்வோா் குற்றத்தை ஒப்புக்கொண்டு சமரசத் தொகை செலுத்தியதால், அவா்கள் மீது காவல் நிலையங்களில் புகாா் பதிவு செய்யப்படவில்லை என்று மின்வாரியம் தெரிவித்தது.