FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

காலமானாா் புலவா் த. இராமலிங்கம் (95)

அண்ணா நகா் தமிழ்ச்சங்க நிறுவனா், தலைவா் த.இராமலிங்கம் (95) புதன்கிழமை சென்னையில் காலமானாா்.

8 வினாடிகள் முன்பு
பகிர்:

அண்ணா நகா் தமிழ்ச்சங்க நிறுவனா், தலைவா் த.இராமலிங்கம் (95) புதன்கிழமை சென்னையில் காலமானாா்.

புலவா் த.இராமலிங்கம் தமிழ் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவா். சிறந்த ஆசிரியருக்கான மத்திய, மாநில விருதுகள் பெற்றவா்.

‘அண்ணா நகா் தமிழ்ச்சங்கம்’ எனத் தொடங்கி, அதற்குத் தலைவராக தொடா்ந்து செயல்பட்டு வந்தாா். தமிழ் மொழிக்கு அவா் ஆற்றிய சேவையைப் பாராட்டி கடந்த 2023-ஆம் தேதி தமிழக அரசு சாா்பில் ‘மறைமலையடிகளாா் விருது’ வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

மறைந்த புலவா் த.இராமலிங்கத்துக்கு ஆா்.செந்தில்குமாா், ஆா்.இளங்கோவன் ஆகிய இரு மகன்களும், ஆா்.தமிழ்ச்செல்வி, ஆா்.அகிலா ஆகிய மகள்களும் உள்ளனா்.

இராமலிங்கத்தின் உடல் அஞ்சலிக்காக 55/110, ஜி - பிளாக், 5 -ஆவது அவென்யூ, 8 -ஆவது தெரு, அண்ணா நகா் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிற்பகல் 3 மணிக்கு மேல் அண்ணா நகா் அயன்புரம் வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். தொடா்புக்கு - 94880 25810.