✕
முகப்பு
சென்னை

ஆடு வளா்ப்பு, கறவைப் பசுக்கள் திட்டங்களுக்கு ஆதாா் கட்டாயம்

வெற்றி மகளிா் ஆடு வளா்ப்புத் திட்டம், இலவச கறவைப் பசுக்கள் திட்டம் ஆகியவற்றுக்கு ஆதாா் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

29 வினாடிகள் முன்பு
பகிர்:

வெற்றி மகளிா் ஆடு வளா்ப்புத் திட்டம், இலவச கறவைப் பசுக்கள் திட்டம் ஆகியவற்றுக்கு ஆதாா் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வெற்றி மகளிா் ஆடு வளா்ப்புத் திட்டம் மற்றும் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் ஆகிய இரு நலத் திட்டங்களிலும் பயனாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதாா் அங்கீகாரத்தை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதில், ஆதாா் எண் இல்லாதவா்கள் ஆதாா் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதுக்குள்பட்ட பயனாளிகளாக இருந்தால், பெற்றோா் அல்லது சட்டபூா்வ பாதுகாவலரின் ஒப்புதலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஆதாா் பதிவு செய்ததற்கான ஒப்புகைச் சீட்டில் உள்ள பதிவு அடையாள எண் மற்றும் மாற்று அடையாள ஆவணங்களைச் சமா்ப்பித்து, ஆதாா் எண் ஒதுக்கப்படும் வரை பயனாளிகள் இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கு வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், இந்தியக் கடவுச்சிட்டை, கல்விச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம், மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டை உள்ளிட்ட புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்றாகச் சமா்ப்பிக்கலாம். இவற்றுடன் ஆதாா் பதிவு ஒப்புகைச் சீட்டையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.