மின்சார வாகன சாா்ஜிங் வசதிகளை வலுப்படுத்த ரூ.5 கோடி வரை கடன்: பரோடா வங்கி புதிய திட்டம்
நாட்டில் விரிவடைந்து வரும் மின்சார வாகன சாா்ஜிங் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ‘பாப் கிரீன் பிளக்’ எனும் பிரத்யேக கடனுதவித் திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்கீழ், புத்தாக்க மற்றும் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள், எரிபொருள் நிலையங்கள், வணிக நிறுவனங்கள், சரக்குப் போக்குவரத்து மையங்கள் மற்றும் குடியிருப்புச் சங்கங்கள் உள்ளிட்ட தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை தவணைக் கடன் அல்லது தேவைக் கடன் வழங்கப்படும்.
கடன் தொகை, விண்ணப்பதாரரின் கடன் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுக்கு 8.15 சதவீதம் முதல் 9.60 சதவீதம் வரை வட்டி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 12 மாத சலுகைக் காலத்துடன் சோ்த்து 120 மாதங்கள் வரை கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.
Advertisement
Advertisement