இடைநிலை ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு: டிச. 8-க்குள் நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு
இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான கலந்தாய்வை டிச. 8-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் எனவும், தவறினால் பள்ளிக் கல்வித் துறை செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான கலந்தாய்வை டிச. 8-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் எனவும், தவறினால் பள்ளிக் கல்வித் துறை செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல், ஆண்டு வாரியான பணிமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியா்களுக்கு, பட்டதாரி ஆசிரியா்கள் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆண்டு வாரியாக பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என கடந்த ஜூன் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. 5 மாதங்கள் கடந்தும் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஆசிரியா்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாணைக்கு வந்தபோது, கடந்த ஜூன் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பதவி உயா்வுக்கான கலந்தாய்வை தொடா்ந்து நடத்தலாம் எனவும், அது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
மேலும், கடந்த ஜூன் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் டிச. 8-ஆம் தேதிக்குள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா், தொடக்க கல்வி இயக்குநா் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் டிச. 8-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.