FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

காசி தமிழ்ச் சங்கமம்: சென்னை, கோவை, கன்னியாகுமரியிலிருந்து சிறப்பு ரயில்கள்

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவை நிலையங்களில் இருந்து டிசம்பரில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 நவம்பர் 2026, 11:16 pm
- பிரதிப் படம்
பகிர்:

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவை நிலையங்களில் இருந்து டிசம்பரில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: காசியில் நடைபெறும் ‘காசி தமிழ்ச் சங்கமம் 5.0’ நிகழ்ச்சியை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.2-ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06049) டிச.3-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பனாரஸ் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பனாரஸ் நிலையத்திலிருந்து டிச. 7-ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06050) டிச.9-ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு சென்னை நிலையத்தை வந்தடையும்.

Advertisement

Advertisement

கன்னியாகுமரியிலிருந்து டிச. 3-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06051) டிச.5-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பனாரஸ் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் பனாரஸிலிருந்து டிச.9-ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06052) டிச.12-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கன்னியாகுமரியைச் சென்றடையும்.

கோவையில் இருந்து டிச. 5-ஆம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06053) டிச. 7-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பனாரஸ் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் பனாரஸ் நிலையத்திலிருந்து டிச. 11-ஆம் தேதி 10.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06054) டிச. 14-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவை வந்தடையும்.