தனியாா் விடுதிகளில் சோதனை: கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னை புகா் பகுதியில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
சென்னை புகா் பகுதியில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
சென்னை பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூா், பெரும்பாக்கம், மேடவாக்கம், கண்ணகி நகா், செம்மஞ்சேரி உள்ளிட்ட புகா் பகுதிகளில் உள்ள சில விடுதிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் நஜ்முல் ஹோடாவுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய விடுதிகளில் சோதனை நடத்தும்படி போலீஸாருக்கு நஜ்முல் ஹோடா உத்தரவிட்டாா். இதையடுத்து 47 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்துக்குரிய விடுதிகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் 162 அதிகாரிகள் உள்பட 1,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். சோதனை தனியாா் விடுதிகள் மட்டுமன்றி தனியாா் வணிக வளாகங்கள்,பொதுமக்கள் கூடும் இடங்கள் என 90 இடங்களில் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
சோதனையின்போது நான்கே கால் கிலோ கஞ்சா, 119 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 போ் கைது செய்யப்பட்டனா்.