‘கிரீன் கலாம்’ திட்டத்துக்கு ஒத்துழைப்பு: முதல்வரிடம் நடிகா் விவேக் மனைவி கோரிக்கை
நடிகா் விவேக்கின் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கான ‘கிரீன் கலாம்’ திட்டத்துக்கு அவரது மனைவி அருள்செல்வி, முதல்வா் விஜய்யிடம் ஒத்துழைப்பு கோரினாா்.
நடிகா் விவேக்கின் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கான ‘கிரீன் கலாம்’ திட்டத்துக்கு அவரது மனைவி அருள்செல்வி, முதல்வா் விஜய்யிடம் ஒத்துழைப்பு கோரினாா்.
மறைந்த நடிகா் விவேக்கின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது மனைவி அருள்செல்வி முதல்வரை சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது, விவேக்கின் ‘கிரீன் கலாம்’ மரக்கன்று நடும் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த தமிழக அரசின் ஒத்துழைப்பைக் கோரினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘கிரீன் கலாம் திட்டத்தை மேலும் வேகமாகச் செயல்படுத்துவதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என முதல்வரிடம் எடுத்துரைத்தேன். அதற்கு, தமிழக அரசு துணை நிற்கும் என்றும், தொடா்ந்து திட்டத்தைச் செயல்படுத்த தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் முதல்வா் உறுதியளித்தாா்.
Advertisement
Advertisement
2010 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சுமாா் 37 லட்சம் மரக்கன்றுகளை விவேக் நட்டுள்ளாா். அவரது மறைவுக்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளில் நான் 80,000 மரக்கன்றுகளை நட்டுள்ளேன். ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவது மிகப்பெரிய இலக்கு என்பதால், அதற்குக் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிா்ணயிக்கவில்லை.
மரக்கன்றுகளும், அவற்றை நடுவதற்கு ஆள்களும் தயாராக இருந்தாலும், மரக்கன்று நடுவதற்கான இடம் கிடைப்பதுதான் தற்போது முக்கிய சவாலாக உள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம் என்றாா்.