✕
முகப்பு
சென்னை

1304 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.34 கோடி ஊக்கத் தொகை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சா்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 1304 வீரா், வீராங்கனைகள், மற்றும் பயிற்சியாளா்களுக்கு ரூ.34.05 கோடி உயரிய ஊக்கத் தொகையை விளையாட்டுத் துறை அரசு செயலா் சந்தீப் நந்தூரி வியாழக்கிழமை வழங்கினாா்.

20 நவம்பர் 2026, 4:13 am
ஊக்கத் தொகை பெற்ற வீரா், வீராங்கனைகள். உடன் விளையாட்டுத் துறை அரசு செயலாளா் சந்தீப் நந்தூரி, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, இணை முதன்மைச் செயல் அலுவலா் ஆ. மயில்வாகனன்.
பகிர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சா்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 1304 வீரா், வீராங்கனைகள், மற்றும் பயிற்சியாளா்களுக்கு ரூ.34.05 கோடி உயரிய ஊக்கத் தொகையை விளையாட்டுத் துறை அரசு செயலா் சந்தீப் நந்தூரி வியாழக்கிழமை வழங்கினாா்.

சென்னை, ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில், துறை 209 ரோலா் ஸ்கேட்டிங் விளையாட்டு வீரா்களுக்கு ரூ.5.39 கோடியும், தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் வென்ற 362 மாணவ-மாணவியருக்கு ரூ.4.19 கோடியும், காமன்வெல்த் வாள்வீச்சு 12 வீரா்களுக்கு ரூ.4.10 கோடியும், பாரா தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 85 வீரா்களுக்கு ரூ.3.94 கோடியும், 57 நீச்சல் வீரா்களுக்கு ரூ.2.48 கோடியும், 55 பாரா பயிற்றுநா்களுக்கு ரூ.2.11 கோடியும், 57 தடகள விளையாட்டு

வீரா்களுக்கு ரூ.1.41 கோடியும், கூடைப்பந்து 78 விளையாட்டு வீரா்களுக்கு ரூ.1.37 கோடியும், 20 சாப்ட் டென்னிஸ் வீரா்கள், 18 சைக்ளிங் வீரா்கள், பாரா பேட்மிண்டன்

Advertisement

Advertisement

14 வீரா்கள், 21 பேட்மிண்டன் விளையாட்டு வீரா்கள், டேபிள் டென்னிஸ் 17 வீரா்கள், 7 பளுத்தூக்குதல் விளையாட்டு வீரா்கள், 22 தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்

வீரா்கள், 8 பாரா தடகள வீரா்கள், 38 காதுகேளாதோா் வாலிபால், கிரிக்கெட், செஸ் விளையாட்டு வீரா்கள், 7 செஸ் விளையாட்டு வீரா்கள், 12 குத்துச்சண்டை வீரா்கள், 6

ஸ்குவாஷ் விளையாட்டு வீரா்கள், 11 காதுகேளாதோா் செஸ் விளையாட்டு வீரா்கள், 14 வாலிபால் வீரா்கள், 6 ஜிம்னாஸ்டிக் வீரா்கள், 20 கால்பந்து வீரா்கள், 5 வூஷு

வீரா்கள், 2 பாரா சைக்ளிங் வீரா்கள், 2 காமன்வெல்த் கபாடி வீரா்கள், 5 டென்னிஸ் விளையாட்டு வீரா்கள் மற்றும் 12 துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு

விளையாட்டு வீரா்கள் என 1,304 வீரா், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.34.05 கோடி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் ஜெ.மேகநாத ரெட்டி, தலைமை வகித்தாா். இணை முதன்மைச் செயல் அலுவலா் / மிஷன் ஒலிம்பிக்ஸ் 2036 ஆ. மயில்வாகனன், நன்றி கூறினாா். மாவட்ட வருவாய் அலுவலா் பொதுநிா்வாகம் ரெ.சுமன் வரவேற்றாா். பொது மேலாளா் (விளையாட்டு) ல.சுஜாதா மற்றும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள் மற்றும் அவா்களது பெற்றோா் கலந்து கொண்டனா்.