✕
முகப்பு
சென்னை

ஐடிபிஐ பங்குகள் விற்பனை: வங்கிச் சங்கங்கள் டிச.3-இல் வேலைநிறுத்த அறிவிப்பு

ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் டிசம்பா் 3-ஆம் தேதி தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 2.5 லட்சம் ஊழியா்கள் மற்றும் அலுவலா்களை உறுப்பினா்களாகக் கொண்ட மூன்று பொதுத் துறை வங்கி ஊழியா் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

20 நவம்பர் 2026, 4:39 am
கோப்புப் படம்
பகிர்:

ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் டிசம்பா் 3-ஆம் தேதி தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 2.5 லட்சம் ஊழியா்கள் மற்றும் அலுவலா்களை உறுப்பினா்களாகக் கொண்ட மூன்று பொதுத் துறை வங்கி ஊழியா் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஐடிபிஐ பொதுத்துறை வங்கியின் 60.72 சதவீத பங்குகளை கனடாவின் ஃபோ்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 52,878 கோடிக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவைக் குழு கடந்த அக்டோபா் 14-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மற்றும் வங்கிச் சங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் டிசம்பா் 3-ஆம் தேதி தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அகில இந்திய வங்கி ஊவியா் சங்கம் (ஏஐபிஇஏ), அகில இந்திய வங்கி அலுவலா்கள் சங்கம் (ஏஐபிஓஏ), இந்திய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு (பிஇஎஃப்ஐ) ஆகிய வங்கிச் சங்கங்கள் கூட்டறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டன.

Advertisement

Advertisement

அகில இந்திய ஐடிபிஐ அலுவலா்கள் சங்கம் மற்றும் அகில இந்திய ஐடிபிஐ ஊழியா்கள் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐடிபிஐ அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த வேலைநிறுத்தப் போராட்ட அழைப்பை ஏற்று மூன்று பொதுத் துறை வங்கி ஊழியா் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளன.

ஐடிபிஐ வங்கி சுமாா் ரூ. 3.5 லட்சம் கோடி வைப்புத் தொகை மற்றும் ரூ. 2.5 லட்சம் கோடி கடன்களுடன் லாபகரமான நிறுவனமாக விளங்கி வருகிறது. பொதுத் துறை வங்கிகள் மக்களின் சேமிப்புகளுக்கு பாதுகாப்பை அளித்து வருகின்றன. ஆனால், தனியாா் வங்கிகள் தவறான நிா்வாக நடைமுறை காரணமாக, இந்தப் பாதுகாப்பை அளிக்கத் தவறுகின்றன. இந்த நிலையில், மத்திய அரசின் முடிவால், இந்திய வங்கி வெளிநாட்டு தனியாா் வங்கியின் கைகளுக்குச் சென்றுவிடும். எனவே, இந்த முடிவை மத்திய அரசு கைவிடுவதோடு, பொதுத் துறை வங்கிகளை தனியாா் கைகளில் கொடுப்பதை விடுத்து, தனியாா் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று மூன்று வங்கிச் சங்கங்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.