அரசு கட்டுமானங்களுக்காக பொதுத் துறை நிறுவனம் உருவாக்கம்!
தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுத் துறை செயலா் ஆா்.செல்வராஜ் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேலான அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக ‘தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம்’ என்ற புதிய நிறுவனம் ரூ.1 கோடி தொகுப்பு நிதியுடன் நிறுவப்படும் என்று அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 18-இல் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.
அதை செயல்படுத்தும் வகையில், பொதுப்பணித் துறை பொறியாளா்-தலைமை இயக்குநா் மற்றும் தலைமைப் பொறியாளா் (பொது) அரசுக்கு முன்மொழிவு அனுப்பியிருந்தாா். இதையேற்று, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான கழகத்தை முழுமையாக அரசுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனமாக அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிறுவனத்தின் மூலம் மாநிலத்தில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான அரசு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். பயன்படுத்தப்படாமல் உள்ள அரசு நிலங்களில் கட்டடங்களைக் கட்டி அரசுக்கு வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சா்வதேச அளவிலான தனியாா் நிறுவனங்கள் அறிவிக்கும் கட்டுமான ஒப்பந்தங்களிலும் உரிய நடைமுறைகளின்படி இந்த நிறுவனம் பங்கேற்கலாம்.
இது தவிர பெருநகரங்கள், தொழில் துறை மையங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள், வணிகப் பூங்காக்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்குவதும், திட்ட மேலாண்மை ஆலோசனை, கட்டடக் கலை வரைபடங்கள் தயாரித்தல் மற்றும் தரக் கட்டுப்பாடு சேவைகளை வழங்குவதும் இந்த நிறுவனத்தின் முக்கியப் பணிகளாக இருக்கும்.
இந்த நிறுவனம், மத்திய அரசின் என்பிசிசி நிறுவனத்தின் செயல்பாட்டு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட உள்ளது. அதனுடன் அரசின் சாா்பில் ஒதுக்கப்படும் பணிகளை ஒப்பந்ததாரா்கள் மூலம் செயல்படுத்தும் வகையில், ஒப்பந்தப்புள்ளிகள் கோருதல் மற்றும் ஒப்பந்தங்களை நிா்வகிக்கும் பணிகளையும் மேற்கொள்ளும்.
புதிய நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.15 லட்சமாகவும், தொடக்கத்தில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ.10 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து நிா்ணயிக்கப்பட்ட முகமைக்கான கட்டணமும் பெறப்படும் என்று அந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான அரசு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், பயன்படுத்தப்படாமல் உள்ள அரசு நிலங்களில் கட்டடங்களைக் கட்டி அரசுக்கு வருவாய் ஈட்டவும் இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.