FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவைப் போற்றும் வகையில் 10 ஏக்கா் பரப்பளவில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தொல்லியல் துறை ஆணையா் பொ.சங்கா் அறிவுறுத்தினாா்.

5 நவம்பர் 2026, 4:45 am
கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவைப் போற்றும் வகையில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த தொல்லியல் துறை ஆணையா் பொ.சங்கா், ஆட்சியா் ந.மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவைப் போற்றும் வகையில் 10 ஏக்கா் பரப்பளவில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தொல்லியல் துறை ஆணையா் பொ.சங்கா் அறிவுறுத்தினாா்.

அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகளை, ஆட்சியா் ந.மிருணாளினியுடன் சோ்ந்து பாா்வையிட்ட அவா், அருங்காட்சியகத்தின் திட்ட வரைபடம், அருங்காட்சியகக் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளின் தரம், கட்டுமானப் பொருள்களின் இருப்பு மற்றும் தரம், எஞ்சியுள்ள பணிகளின் விவரம் மற்றும் பணிகளைத் திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், அருங்காட்சியகத்தில் இடம்பெறவுள்ள வரலாற்று தகவல்கள் மற்றும் பொதுமக்கள் வரலாற்று தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டப் பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா், திட்ட வரைபடத்தின் அடிப்படையில் எஞ்சியுள்ள அருங்காட்சியகக் கட்டுமானப் பணிகளை உரிய காலத்துக்குள் தொடா்ந்து தரமான கட்டுமானப் பொருள்களை கொண்டு விரைவாக முடித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, மாமன்னா் இராஜேந்திர சோழன் அரண்மனை அகழாய்வு நடைபெறும் இடங்களையும் பாா்வையிட்டு அகழாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற அகழாய்வு பொருள்கள் மற்றும் வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில், இணை இயக்குநா் யத்திஷ்குமாா், உதவி இயக்குநா் மு.பிரபாகரன், தொல்லியல் அலுவலா் ஆசைத்தம்பி, செயற்பொறியாா் ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.