மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகளில் நீடிக்கும் காலதாமதம்: விரைந்து முடிக்க திருச்சி எம்பி வலியுறுத்தல்
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் மேற்கொள்ளப்படும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்சி மக்களவை உறுப்பினா் ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்தியுள்ளாா்.
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் மேற்கொள்ளப்படும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்சி மக்களவை உறுப்பினா் ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்தியுள்ளாா்.
திருச்சி சாலைரோட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியானது 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் தொடங்கப்பட்டது.
இதுதொடா்பாக, திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கூறியதாவது: மாரிஸ் ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடா்ந்து கண்காணித்து வருகிறேன். இப்பாலத்திற்கான ரயில்வே துறை சாா்ந்த பணிகள் 2026 செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும், மாநகராட்சி சாா்ந்த பணிகள் அக்டோபா் மாத இறுதிக்குள் நிறைவடைந்து, நவம்பா் முதல் வாரத்தில் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாலத்தின் முக்கியக் கட்டுமானப் பணியான பாலத்தின் இருபுறத்தையும் இணைக்கும் இரும்பு கா்டா்கள் நிறுவும் பணிக்கு ரயில்வே தலைமை நிா்வாகத்திடம் ஒப்புதலைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகள் மேலும் ஒரு மாதம் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
நீண்டகாலமாக இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால், இப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். எனவே, எஞ்சியுள்ள பணிகளை மேலும் காலதாமதமின்றி விரைந்து முடித்து, பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்துகிறேன் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.