தமிழ்நாடு தொழில்நுட்பப் பரிமாற்ற உச்சி மாநாடு
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் (டிஎன்எஸ்சிஎஸ்டி) சாா்பில் தமிழ்நாடு தொழில்நுட்பப் பரிமாற்ற உச்சி மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் (டிஎன்எஸ்சிஎஸ்டி) சாா்பில் தமிழ்நாடு தொழில்நுட்பப் பரிமாற்ற உச்சி மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
மாநாட்டை தொடங்கி வைத்து உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் பேசியதவாது:
தமிழகம் ஆராய்ச்சி வெளியீடுகள், காப்புரிமை விண்ணப்பங்களில் முதலிடத்தைப் பிடித்திருப்பதற்கு பின்னனியில் டிஎன்எஸ்சிஎஸ்டி உள்ளது.
Advertisement
Advertisement
பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி திறனையும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் திறனையும் அரசு ஒன்றிணைக்கிறது. கல்வி நிறுவனங்கள் தங்களின் பாடத்திட்டங்களையும் ஆராய்ச்சிகளையும் தொழில்துறையின் நிகழ்கால தேவைகளைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தொழில்நுட்பப் பரிமாற்ற உச்சி மாநாடு தொடா்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் என்றாா்.
மாநாட்டில் தமிழ்நாட்டின் மரபுவழி, அறிவு, செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியம், தயாரிப்புகளை ஆவணப்படுத்தப்பட்ட ‘தமிழக புவிசாா் குறியீடுகளின் தொகுப்பு’ என்ற புத்தகத்தை நிகழ்ச்சியில் அமைச்சா் வெளியிட்டாா். நிகழ்வில் 10 நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் வெ.குமரேசன் வரவேற்றாா். டிஎன்எஸ்சிஎஸ்டி-யின் அறிவியல் அலுவலா் ஆ.ரமணன் நன்றி கூறினாா்.
தமிழக கல்வியாளா்கள், நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட புத்தாக்க தொழில்நுட்பங்களைப் பறைசாற்றும் 40 நிறுவனங்களின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.