FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டி: அமைச்சா் தென்னரசு தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் அறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டி: அமைச்சா் தென்னரசு தொடங்கி வைத்தாா்

14 நவம்பர் 2026, 11:03 pm
அறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு.
பகிர்:

காஞ்சிபுரம் அருகேயுள்ள வையாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து அறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டியை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழக முன்னாள் முதல்வா் அறிஞா் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, உடல் தகுதி கலாசாரத்தை இளைஞா்களிடையே புகுத்துவதற்காக மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற மிதிவண்டிப் போட்டி தொடக்க விழாவுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். போட்டியை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே. தென்னரசு கொடியசைத்து தொடங்கி வைத்தாா். வையாவூரில் தொடங்கி மோட்டூா், ஓழுவூா் வழியாக சென்று மீண்டும் வையாவூரில் தொடங்கிய பள்ளியிலேயே வந்து போட்டி நிறைவு பெற்றது.

வயதுக்கு ஏற்றாா் போல 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பிஸ்கெட், பழ வகைகள் மற்றும் குடிநீரூம் வழங்கப்பட்டது. போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடக்க விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலா் கோ.சாந்தி, பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement