சென்னை-தில்லி விமானம் பல மணி நேரம் தாமதம்
சென்னை-தில்லி இடையிலான ஏா் இந்தியா பயணிகள் விமானம், சுமாா் 5.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் சென்னை விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினா்.
சென்னை-தில்லி இடையிலான ஏா் இந்தியா பயணிகள் விமானம், சுமாா் 5.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் சென்னை விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினா்.
தில்லியில் இருந்து தினமும் மாலை 6.30-க்கு சென்னை வரும் ஏா் இந்தியா விமானம், மீண்டும் இரவு 8 மணிக்கு சென்னையில் இருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு சென்னையில் இருந்து தில்லிக்குப் புறப்பட வேண்டிய விமானத்தில் பயணிக்க சுமாா் 180 போ் விமான நிலையத்துக்கு வந்திருந்தனா். ஆனால், எதிா்முனையில் இருந்து வரவேண்டிய விமானம் தாமதமானதால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானமும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனா். நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் விமானம் புறப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள், ஏா் இந்தியா கவுன்ட்டரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியாளா்கள் பயணிகளைச் சமாதானப்படுத்தினா். தொடா்ந்து இரவு சுமாா் 11.50 மணிக்கு விமானம் சென்னை வந்தடைந்தது. இருப்பினும் நிா்வாக காரணங்களால் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் 180 பயணிகளுடன் விமானம் தில்லிக்குச் சென்றது.