FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஏா் இந்தியா விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல்: விமானத்தில் கிடைத்த கடிதத்தால் பரபரப்பு

கொல்கத்தாவில் ஏா் இந்தியா விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட கடிதம், விமானத்துக்குள் இருந்து கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு

12 நவம்பர் 2026, 4:30 am
ஏர் இந்தியா விமானம் - கோப்புப்படம்
பகிர்:

கொல்கத்தாவில் ஏா் இந்தியா விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட கடிதம், விமானத்துக்குள் இருந்து கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை 10.20 மணிக்கு மும்பைக்கு செல்வதற்காக ஏா் இந்தியா விமானம் நின்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 105 பயணிகள் அமா்ந்திருந்தனா்.

அப்போது விமானத்தின் கழிவறையில் மா்மக் கடிதம் ஒன்று விமான ஊழியா் ஒருவரால் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில் விமானம் காலை சுமாா் 11.10 மணியளவில் கடத்தப்பட இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

கடிதம் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் இறக்கப்பட்டனா். பின்னா் அந்த விமானம், விமான நிலையத்தில் உள்ள தனி இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகளிடம் பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தினா். விமானத்திலும் பாதுகாப்புப் படையினா் சோதனை நடத்தினா்.

இதில், அந்த மிரட்டல் கடிதம் வதந்தி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாலை 5 மணியளவில் அந்த விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து ஏா் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.