FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அகமதாபாத் - ஹைதராபாத் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சிறுமி கூறியதால் பரபரப்பு!

அகமதாபாத் - ஹைதராபாத் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சிறுமி கூறியதால் ஏற்பட்ட பரபரப்பு பற்றி...

18 வினாடிகள் முன்பு
விமானம்.
பகிர்:

அகமதாபாத் - ஹைதராபாத் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சிறுமி கூறியதால் பரபரப்பு தொற்றுக்கொண்டது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் 12 வயது சிறுமி வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதை அடுத்து, விமானம் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அது விளையாட்டுக்காக சிறுமி கூறியது என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

பள்ளிச் சுற்றுலா முடிந்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுடன் சனிக்கிழமை ஹைதராபாத் திரும்பிய 7ஆம் வகுப்பு மாணவி, தனது வகுப்பு தோழியிடம் விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்ட விமான பணிப்பெண் உடனே விமானியிடம் தெரிவித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாதுகாப்பு நடைமுறைகளின்படி, விமானம் ஹைதராபாத் வந்தடைந்ததும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. இதன்பிறகே விமான நிலையித்தில் நிலவிய பரபரப்பு தணிந்தது.

இதுகுறித்து காவல் அதிகாரி மேலும் கூறுகையில், "அந்த மாணவி சிறுமி என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், ஆசிரியர்கள் மூலம் அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அவர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. அறியாமையால் இவ்வாறு கூறிவிட்டார்" என்றார்.

summary

A bomb threat allegedly made by a 12-year-old girl aboard a city-bound flight from Ahmedabad triggered a security alert at the Rajiv Gandhi International (RGIA) Airport here, officials said on Sunday. It later turned out to be a prank.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments