திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத் தூணில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஆய்வு
திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத் தூணில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு குறித்து...

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத் தூணில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலை மேல் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை(நவ. 24) நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள நில அளவைக் கல் (சா்வே தூண்) மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் தற்காலிக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், நெல்லித்தோப்பு, மலைக்குச் செல்லும் படிக்கட்டு பாதை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.