முகப்பு

இனிவரும் ஆண்டுகளிலும்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கருத்து!

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு அண்ணாமலை வரவேற்பு...

24 வினாடிகள் முன்பு
இனிவரும் ஆண்டுகளிலும்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கருத்து!
அண்ணாமலை (கோப்புப்படம்) - படம் - எக்ஸ்
பகிர்:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதை வீ தி லீடர்ஸ் நிறுவனர் கே. அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், புதிய நிபந்தனைகள் விதித்து ஒருநாள் மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு, இந்த ஆண்டு கார்த்திகை தீபம் அன்று ஒரே ஒரு நாள் மட்டுமே தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

இந்த தீர்ப்பை வரவேற்று அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

K. Annamalai, founder of 'We the Leaders', has welcomed the Supreme Court's permission to light a lamp on a pillar atop the Tirupparankundram hill.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.