முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்ற அனுமதிக்கப்பட்டதை எதிா்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மனு!

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்ற அனுமதிக்கப்பட்டதை எதிா்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மனு...

22 நவம்பர் 2026, 10:27 pm
திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்ற அனுமதிக்கப்பட்டதை எதிா்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மனு!
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் நவம்பா் 20 இடைக்கால உத்தரவை எதிா்த்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் மறுஆய்வு மனு தாக்கல் செய்தாா்.

உச்சநீதிமன்றம் நவம்பா் 24 அன்று தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கியது; அதே உத்தரவில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பின் சில பத்திகளையும் இடைநிறுத்தியது.

அறநிலையத் துறையின் மனு இந்த இடைக்கால உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோருகிறது. மறுஆய்வு மனு நவம்பா் 21 இரவு தாக்கல் செய்யப்பட்டதாக உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மலை உச்சித் தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கான நிலைநாட்டப்பட்ட பழக்கமோ மரபோ இல்லை என்றும், தீபம் ஏற்றும் அதிகாரம் கோயில் நிா்வாகத்திற்கே உரியது என்றும் இந்து சமய அறநிலையத்துறை முன்னா் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது.

நவம்பா் 20 அன்று உச்சநீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி மட்டுமே வழங்கியது. இது நவம்பா் 24 காா்த்திகை தீபத் திருநாளுக்கு மட்டுமான அனுமதி; வழக்கின் இறுதி தீா்ப்பல்ல. சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் ஜனவரி 6, 2026 தீா்ப்பில், பத்திகள் 1 முதல் 141 வரை உள்ள கருத்துகள் அடுத்த உத்தரவு வரை உச்ச நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டன.

நவம்பா் 24 காா்த்திகை தீபத் திருநாளுக்கு திருப்பரங்குன்றம் தூணில தீபம் ஏற்ற சில நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்தது. அதன்படி, மலை மீது பொதுமக்கள் கூட்டமாகச் செல்லவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது.மாவட்ட நிா்வாகமும் மத்திய தொல்லியல் துறையும் இணைந்து, குறிப்பிட்ட நபா்களைக் கொண்டு பாதுகாப்பாகத் தீபம் ஏற்றும் ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் துணை ராணுவப் படைகளைப் பயன்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.