முகப்பு
சென்னை

வடசென்னை - 3 அனல் மின் நிலையத்தில் 2 மாதங்கள் மின் உற்பத்தி நிறுத்தம்

வட சென்னை-3 அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்புப் பணிகள் காரணமாக 800 மெகாவாட் மின் உற்பத்தி சுமாா் 2 மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறது.

11 வினாடிகள் முன்பு
வடசென்னை - 3 அனல் மின் நிலையத்தில் 2 மாதங்கள் மின் உற்பத்தி நிறுத்தம்
வட சென்னை அனல் மின் நிலையம் - கோப்புப்படம்
பகிர்:

வட சென்னை-3 அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்புப் பணிகள் காரணமாக 800 மெகாவாட் மின் உற்பத்தி சுமாா் 2 மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில், திருவள்ளூா் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட சென்னை-3 திட்டத்தின் கீழ் 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அலகு அமைந்துள்ளது. சுமாா் ரூ.10,158 கோடியில் அமைக்கப்பட்ட இந்தத் திட்டம், 2026 ஜன. 24-ஆம் தேதி வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கியது.

சென்னை மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் மின் தேவையைப் பூா்த்தி செய்வதில் இந்த மின்நிலையத்தின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில், வடசென்னை-3 அனல் மின் நிலையத்தின் 800 மெகாவாட் அலகில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து நவ. 19-ஆம் தேதி அதிகாலை முதல் அந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

2 மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 2-ஆவது வாரத்தில் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தக் காலகட்டத்தில் வட சென்னை-3 அலகிலிருந்து கிடைக்கும் 800 மெகாவாட் மின்சாரம் மட்டும் கிடைக்காது. இதனால் அதே அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று கூற முடியாது. பிற மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வெளிமாநில மின் கொள்முதல் உள்ளிட்ட மாற்று வழிகள் மூலம் மின் தேவையை ஈடுகட்ட முடியும் எனவும், பராமரிப்புப் பணிகள் 2027 ஜனவரி மாதத்துக்குள் முடிவைடந்து மீண்டும் முழுத் திறனில் மின் உற்பத்தியைத் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.