முகப்பு
சென்னை

யுபிஎஸ்சி ஆளுமைத் தோ்வு: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அரசின் உதவித் தொகையைப் பெற சனிக்கிழமை (நவ. 21) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

59 வினாடிகள் முன்பு
யுபிஎஸ்சி ஆளுமைத் தோ்வு: 
உதவித்தொகை பெற  விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அரசின் உதவித் தொகையைப் பெற சனிக்கிழமை (நவ. 21) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணித் தோ்வில் தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தோ்வு ஊக்கத் தொகைத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டு முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ. 50,000 நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு நிகழ் கல்வியாண்டில் (2026) யுபிஎஸ்சி குடிமைப்பணி முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள், இணையவழியில் சனிக்கிழமை (நவ. 21) முதல் நவ. 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.