ஏரியில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை
சென்னை பள்ளிக்கரணையில் ஏரியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை பள்ளிக்கரணையில் ஏரியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் மிதப்பதாக பள்ளிக்கரணை போலீஸாருக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement