FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி: தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

15 நவம்பர் 2026, 1:32 am
- கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி - கடம்பூா் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட வெங்கடேஸ்வரபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சடலமாக மீட்கப்பட்டவா் வெங்கடேஸ்வரபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகேந்திரன் (44) என்பதும், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement