முகப்பு
சென்னை

ஒப்பந்ததாரா் தொடா்ந்த வழக்கு: டவுன் பஞ்சாயத்துகள் இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

ஒப்பந்ததாரா் தொடா்ந்த வழக்கு: டவுன் பஞ்சாயத்துகள் இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

21 நவம்பர் 2026, 11:20 pm
ஒப்பந்ததாரா் தொடா்ந்த வழக்கு: டவுன் பஞ்சாயத்துகள் இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

தெரு விளக்குகள், மின் சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை விநியோகித்ததற்காக வழங்க வேண்டிய ரூ.17.68 லட்சத்தை வழங்க உத்தரவிடக் கோரி ஒப்பந்ததாரா் தொடா்ந்த வழக்கில், டவுன் பஞ்சாயத்துகள் இயக்குநா், இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தைச் சோ்ந்த டி.ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு தெரு விளக்கு, குடிநீா், பொது சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளுக்காக மின் சாதனப் பொருட்கள் உள்ளிட்டவைகளை கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்.15-ஆம் தேதி வழங்கினேன்.

இதற்காக, சுமாா் ரூ.17.68 லட்சம் பேரூராட்சி வழங்க வேண்டும். ஆனால், இதுவரை பேரூராட்சி செயல் அலுவலா் பணத்தை வழங்கவில்லை. இதுதொடா்பாக, டவுன் பஞ்சாயத்து இயக்குநா், உதவி இயக்குநா் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement

Advertisement

சிறிய ஒப்பந்ததாரரான எனக்கு வழங்க வேண்டிய தொகையை பேரூராட்சி வழங்காததால், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறேன். எனவே, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் தலையிட்டு, பணம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.சத்தியன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு டவுன் பஞ்சாயத்துகள் இயக்குநா், இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோா் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.