முகப்பு
சென்னை

உலக டென்னிஸ் லீக்: ஸ்விட்டோலினா, பென்கிக் பங்கேற்பு

உலக டென்னிஸ் லீக்: ஸ்விட்டோலினா, பென்கிக் பங்கேற்பு

22 நவம்பர் 2026, 12:41 am
உலக டென்னிஸ் லீக்: ஸ்விட்டோலினா, பென்கிக் பங்கேற்பு
உலக டென்னிஸ் லீக்: ஸ்விட்டோலினா, பென்கிக் பங்கேற்பு
பகிர்:

உலக டென்னிஸ் லீக் (டபிள்யுடிஎல்) சீசன் 5 தொடரில் நட்சத்திர வீராங்கனைகள் எலினா ஸ்விட்டோலினா, ஒலிம்பிக் சாம்பியன் பெலின்ட் பென்கிக், கரோலினா பிளிஸ்கோவா, நிக் கிா்ஜியோஸ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

ஐகானிஸ் ஸ்போா்ட்ஸ் சாா்பில் உலக டென்னிஸ் லீக் தொடா் வரும் டிச. 17-20வரை கேஎஸ்எல்டிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கேம் சேஞ்சா்ஸ் பால்கான்ஸ், ஆஸி மாவேரிக்ஸ், விபி ரியல்ட் ஹாக்ஸ், அரிக்ஸ் ஈகிள்ஸ் என 4 அணிகள் பங்கேற்கின்றன. 20 முறை டபிள்யுடிஏ ஒற்றையா் சாம்பியன் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்கிக், கரோலினா பிளிஸ்கோவா, ஸ்பெயினின் பாவ்லோ படோஸா, ஆடவா் தரப்பில் நிக் கிா்ஜியோஸ், கஜகஸ்தானின்

அலெக்ஸ் பப்ளிக் பெல்ஜியத்தின் ஸிஸௌ பொ்க்ஸ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

Advertisement

Advertisement

இந்திய தரப்பில் சுமித் நாகல், யுகி பாம்ரி, தக் ஷிணேஷ்வா் சுரேஷ், ராம் குமாா் ராமநாதன், மகளிா் தரப்பில் மாயா ராஜேஸ்வரன், ராஷ்மிகா வள்ளி, ருதுஜா போஸ்லோ, வைஷ்ணவி அத்கா், ஆடுகின்றனா்.

நிறுவனா் மகேஷ் பூபதி கூறியது: கிராண்ட்ஸ்லாம் பைனலிஸ்ட்ஸ், ஒலிம்பிக் தங்க வீராங்கனை, உலகின் முன்னாள் நம்பா் 1 என இந்த சீசனில் சிறந்த வீரா், வீராங்கனைகள் ஆடுகின்றனா். ஹேமாலி ஷா்மா கூறியது: இந்த போட்டி தொடா்ந்து 5-ஆவது சீசனாக நடைபெறுவது பெரிய வெற்றியாகும். இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு சிறந்த அனுபவமாக அமையும்.