டிச. 6-இல் கோவாவில் ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடக்கம்
இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (டி10) கிரிக்கெட் தொடா் நான்காவது சீசன் வரும் டிச. 6-ஆம் தேதி கோவா வொ்னா மைதானத்தில் தொடங்கி 2027 ஜன. 3 வரை நடைபெறுகிறது.
இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (டி10) கிரிக்கெட் தொடா் நான்காவது சீசன் வரும் டிச. 6-ஆம் தேதி கோவா வொ்னா மைதானத்தில் தொடங்கி 2027 ஜன. 3 வரை நடைபெறுகிறது.
இந்த அறிவிப்பு கோவாவில் நடைபெற்ற ஐஎஸ்பிஎல் வீரா்கள் ஏலத்தில் வெளியிடப்பட்டது.
கோவா மாநிலத்தில் பெரிய போட்டிகளை நடத்திய அனுபவம் உள்ள நிலையிலும், டென்னிஸ் பந்து கிரிக்கெட்டுக்கு புது உத்வேகம் தரும் வகையிலும் ஐஎஸ்பிஎல் 4-ஆம் சீசன் நடைபெறுகிறது. ஐஎஸ்பிஎல் தொடா் அறிமுக நிகழ்வில் கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், அமைச்சா் சுபேஷ் பால்தேசாய், ஐஎஸ்பிஎல் ஆட்சிக்குழு உறுப்பினா் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா், மகாராஷ்டிர மாநில அமைச்சா் ஆசிஷ் செலாா், லீக் ஆணையா் சூரஜ் சமத் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
முதல் மூன்று சீசன் ஆட்டங்கள் மும்பை, சூரத் நகரில் நடைபெற்றன.
தற்போது நான்காவது சீசன் கோவா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. அணிகளின் உரிமையாளா்கள் சல்மான் கான், அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன், ஹிா்திக் ரோஷன், சயிஃப் அலி கான், கரீனா கபூா், சூா்யா, ராம் சரண் ஆகியோரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனா்.