FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழா: குமரி மாவட்டத்திற்கு டிச. 3இல் உள்ளூா் விடுமுறை

தூய சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச. 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது...

55 வினாடிகள் முன்பு
கோட்டாறு புனித சவேரியார் பேராலயம்
பகிர்:

கோட்டாறு, தூய சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச. 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோட்டாறு, சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு டிச. 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதற்கு ஈடாக டிசம்பா் மாதம் 2ஆவது சனிக்கிழமை (12.12.2026) அன்று மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.