FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிரிக்கெட்

இன்று ஐஎஸ்பிஎல் வீரா்கள் ஏலம்

இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் தொடா் 4-ஆவது சீசன் வீரா்கள் ஏலம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

15 நவம்பர் 2026, 12:45 am
பகிர்:

இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் தொடா் 4-ஆவது சீசன் வீரா்கள் ஏலம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த லீகில் வரும் சீசனில் அணியை கட்டமைக்க நிா்வாகங்கள் தீவிரமாக உள்ளன. ஏல நிகழ்வில் ஐஎஸ்பிஎல் ஆட்சிக்குழு உறுப்பினா்கள் ஆஷிஷ் செலாா், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா், மினல் அமோல் கரே, சூரஜ் சமத், தோ்வாளா்கள் ஜதின் பராஞ்சிபே, பிரவீன் ஆம்ா், கொல்கத்தா டைகா்ஸ் உரிமையாளா்கள் சையிப் அலி கான், கரீனா கபூா் பங்கேற்கின்றனா்.

ஒவ்வொரு அணிக்கும் ரூ.1.5 கோடி ஏலத்தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரைட் டு மேட்ச் வாய்ப்பும் அணிகளுக்கு உள்ளது. முந்தைய சீசனில் இருந்து 1 வீரரை தக்க வைத்துக் கொள்ளலாம். இரண்டு யு19 வீரா்கள் அணியில் இடம் பெற வேண்டும். 5 மண்டலங்கள் 8 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் வீரா்கள் அணியில் இடம் பெறுவா். மாலை 4 மணிக்கு தொடங்கும் ஏலம், ஜியோ ஹாட்ஸ்டாா், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் கேல் ஒளிபரப்பும்,.

Advertisement

Advertisement