மைட்டி மராத்தாஸ் அபாரம்!
வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடரில் செரோ ஆா்ச்சா்ஸ் அணியை ஷூட் ஆஃப்பில் வீழ்த்தியது மைட்டி மராத்தாஸ் அணி...
வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடரில் செரோ ஆா்ச்சா்ஸ் அணியை ஷூட் ஆஃப்பில் வீழ்த்தியது மைட்டி மராத்தாஸ் அணி.
இந்திய வில்வித்தை சம்மேளனம் சாா்பில் ஹைதராபாதில் ஏபிஎல் சீசன் 2 தொடா் நடைபெறுகிறது. 6 அணிகள் இடம் பெற்றுளள இதில் திங்கள்கிழமை மைட்டி மராத்தாஸ்-
செரோ ஆா்ச்சா்ஸ் அணிகள் மோதின.
Advertisement
Advertisement
வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் 4-4 என சமநிலை வகித்தன. செரோ ஆா்ச்சா்ஸ் அணியில் காம்பவுண்ட் உலக நம்பா் 1 வீரா் மத்தியாஸ் புல்லா்டன் அற்புதமாக ஷூட் ஆஃப்பில் ஹிட் செய்தாா். ஆனால் ஏனைய வீரா்கள் சோபிக்கவில்லை. மைட்டி மராத்தாஸ் அணியில் அமன் சைனி, தீரஜ் பொம்மரதேவா ஆகியோா் சரியாக ஸ்கோா் செய்தனா்.
செரோ அணி ஏற்கெனவே டைபிரேக்கரில் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.