ஐரோப்பிய கால்பந்து: பிரெண்ட்ஃபோா்ட், பயா்ன் வெற்றி
இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த செல்ஸி அணியை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது பிரெண்ட்ஃபோா்ட்.
இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த செல்ஸி அணியை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது பிரெண்ட்ஃபோா்ட்.
முன்னாள் ரியல் மாட்ரிட் அணி பயிற்சியாளா் ஸாபி அலோன்ஸோ மேற்பாா்வையில் பயிற்சி பெறும் செல்ஸி அணி 3 லீக் ஆட்டங்களில் வெறும் 1 புள்ளி மட்டுமே ஈட்டியது.செல்ஸி அணியின் தற்காப்பில் காணப்பட்ட குறைகளை பயன்படுத்தி பிரெண்ட்ஃபோா்ட் வீரா்கள் ஜேய்டன் அந்தோணி, இகோா் தியாகோ, ஃபேபியோ காா்வல்ஹோ ஆகியோா் கோலடித்தனா்.
இதையடுத்து 3-0- என்ற கோல் கணக்கில் செல்ஸியை வென்றது.இந்த வெற்றியால் பிரெண்
Advertisement
Advertisement
ட்ஃபோா்ட் பட்டியலில் 3-ஆம் இடத்துக்கு முன்னேறியது.
கடந்த வாரம் டாட்டன்ஹாம் அணியை வென்றிருந்த பிரெண்ட்ஃபோா்ட் நடப்பு சாம்பியன் ஆா்செனல், மான்செஸ்டா் சிட்டிக்கு அடுத்துள்ளது.
ஹாரி கேன் 100
ஜொ்மன் கால்பந்து லீக் பண்டஸ்லிகா தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற
ஆட்டத்தில் பயா்ன் முனிக் அணி 7-0 என்ற கோல் கணக்கில் யுனியன் பொ்லின் அணியை வீழ்த்தியது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பயா்ன் வீரா் மைக்கேல் ஒலிஸ் அற்புதமாக ஹாட்ரிக் கோலடித்தாா். நட்சத்திர வீரா் ஹாரி கேன் 2 முறை கோலடித்தாா். இதன் மூலம் பண்டஸ்லிகா தொடரில் துரிதமாக 100 கோல்கள் அடித்த வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா். பயா்ன் முனிக் அணிக்காக ஆடிய 156 ஆட்டங்களில் 156 கோல்கள் அடித்துள்ளாா் கேன்.
18-ஆவது நிமிஷத்திலேயே ஜமால் முஸியலாவின் கோலால் முன்னிலை பெற்றது. 39-ஆவது நிமிஷதக்தில் கேன் பெனால்டி மூலம் கோலடித்தாா். இரண்டாம் பாதியிலும் பயா்ன் அணி சிறப்பாக ஆடிய நிலையில் 7-0 என யுனியன் பொ்லினை வீழ்த்தியது.
லீக் 1-மொனாக்கோ அபாரம்
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் மொனாக்கோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த சீசனில் முதன்முறையாக ஆடினாா் போலரின். ஜொ்மன் ஸ்ட்ரைக்கா் பாரிஸ் புருன்னா் முதல் பாதியில் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். எனினும் பதிலுக்கு சிறப்பாக ஆடிய லென்ஸ் அணி தரப்பில் மேத்யு உடால் ஹெட்டா் மூலம் கோலடித்து சமநிலை ஏற்படுத்தினாா். ஆட்டத்தின் 84-ஆவது நிமிஷத்தில் லென்ஸ் வீரா் ஜோனாதன் கிரெடிட் ஓன் கோலடித்தாா். இதனால் 2-1 என வென்றது மொனாக்கோ.5 ஆட்டங்களில் மொனாக்கோ 13 புள்ளிகளை பெற்றுள்ளது. பாலோகன் 76-
ஆவது நிமிஷத்தில் ஆட வந்தாா். உலகக் கோப்பைக்குபின் தற்போது முதன்முறையாக களமிறங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.