FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லீக் 1: நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சியளித்த மொனாக்கோ!

லீக் 1 தொடரில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சியளித்த மொனாக்கோ குறித்து...

5 செப்டம்பர் 2026, 2:03 pm IST
வெற்றிக் களிப்பில் மொனாக்கோ அணியினர். - படம்: எக்ஸ் / ஏஎஸ் மொனாக்கோ
பகிர்:

பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 தொடரில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜிக்கு மொனாக்கோ அதிர்ச்சியளித்தது. இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

லீக் 1 மற்றும் சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனாக இருக்கும் பிஎஸ்ஜி 12ஆவது இடத்தில் இருப்பது அதன் ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது.

லீக் 1 தொடரில் இன்று பிஎஸ்ஜி - மொனாக்கோ அணிகள் மோதின. இதில் மொனாக்கோ 2-1 என த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதல் பாதியில் பிஎஸ்ஜியின் மார்கினோஸ் 38ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-0 என முன்னிலைப் பெற வைத்தார்.

Advertisement

Advertisement

இரண்டாம் பாதியில் மொனாகோ அணியினர் 58, 72ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 2-1 என வென்றனர். போட்டியில் 66 சதவிகித நேரம் பந்தை பிஎஸ்ஜி தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் மொனாகோ கோல் அடித்து அசத்தினார்கள்.

முந்தைய போட்டியிலும் பிஎஸ்ஜி தனது தடுப்பாட்டத்தில் கவனம் தேவையாக இருந்ததை பயிற்சியாளர் கூறியிருந்தார். இந்தப் போட்டியிலும் தடுப்பாட்டத்தில் கோட்டைவிட்டனர்.

புள்ளிப் பட்டியலில் மொனாக்கோ முதலிடத்திலும் லென்ஸ் 7ஆவது இடத்திலும் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி 12ஆவது இடத்திலும் இருக்கிறார்கள். கடைசி மூன்று ஆட்டங்களிலும் பிஎஸ்ஜியை மொனாக்கோ வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Ligue 1: Monaco stuns defending champions PSG!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments