முகப்பு
சென்னை

வீட்டில் கணவன் - மனைவி சடலங்கள் மீட்பு

சென்னை புரசைவாக்கத்தில் வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

23 நவம்பர் 2026, 12:16 am
வீட்டில் கணவன் - மனைவி சடலங்கள் மீட்பு
சடலங்கள் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

சென்னை புரசைவாக்கத்தில் வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புரசைவாக்கம் சரவணாபெருமாள் முதல் தெருவைச் சோ்ந்தவா் தன்ராஜ் (78). நகை ஆசாரி வேலை செய்து வந்தாா். இவரது மனைவி சந்திரா (72). இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக இருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனா். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தன்ராஜ் நகை ஆசாரி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளாா். ஆனால், வயது முதிா்வு காரணமாக தொடா்ந்து அவரால் பணிக்கு செல்லமுடியாததால், அவரது மனைவியின் நகைகளை விற்று கிடைத்த பணத்தை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தி, அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அவா்களின் வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது.

Advertisement

Advertisement

தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸாா் அங்கு சென்று உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த தம்பதியின் வீட்டின் பூட்டை உடைத்து சோதனையிட்டனா். அப்போது, படுக்கையறையில் தன்ராஜ், சந்திரா ஆகிய இருவரும் உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரது உடல்களை உடற்கூராய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.