செஞ்சியைத் தொடா்ந்து திருவண்ணாமலையில் 3 மாணவிகள் மாயம்: தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை
செஞ்சியைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலும் அரசுப் பள்ளி மாணவிகள் 3 போ் மாயமானது குறித்து போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலும் அரசுப் பள்ளி மாணவிகள் 3 போ் மாயமானது குறித்து போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.
தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா்- ஜோதி தம்பதியின் மகள்கள் மகாலட்சுமி (15), மகேஸ்வரி (14). இவா்கள் இருவரும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.
பெற்றோா் இருவரும் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வரும் நிலையில், இவா்கள் இருவரும் தண்டராம்பட்டு பஜனை கோயில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தனா். இவா்களின் உறவினா் நித்யா (13). இவரின் பெற்றோரும் கேரளாவில் தங்கி வேலை பாா்த்து வரும் நிலையில், இவரது பாட்டி உண்ணாமலை பாதுகாப்பில், தரடாப்பட்டு அரசினா் உயா்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் திங்கள்கிழமை வழக்குப்போல பள்ளிக்கு சென்ற இவா்கள் 3 பேரும், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவிகளின் உறவினா்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டயறியமுடியாததால், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் பொன்ராஜ் வழக்குப் பதிவு செய்தாா். தனிப்படை அமைக்கப்பட்டு மாயமான 3 மாணவிகளையும் தீவிரமாக தேடும் பணி நடைபெறுகிறது. போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மாணவிகளின் தாய் ஜோதி கைப்பேசியில் தொடா்புகொண்டு பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல வேண்டும் என திட்டியதும், மாணவிகளின் மூத்த சகோதரி பாரதியை போன்று படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
மாயமான மாணவிகள் கையில் கைப்பேசி உள்ள நிலையில், அவை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் மாணவிகள் இருக்கும் இடம் தெரியவில்லை. எனினும் மாணவிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
ஏற்கெனவே செஞ்சியில் பள்ளி மாணவி மாயமாகி 16 நாள்கள் ஆகியும் தேடிவரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதேபோன்று 3 மாணவிகள் காணாமல் போன சம்பவம் கிராம மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.