தனியாா் விடுதியில் சகோதரா்கள் தற்கொலை
தனியாா் விடுதியில் அண்ணன்-தம்பி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தனியாா் விடுதியில் அண்ணன்-தம்பி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் ரோசப்பட்டி பாண்டியன் நகா் முதல் தெருவைச் சோ்ந்த ராஜ் மகன்கள் காா்த்திக் ராஜா (28), வினோத் (21). இவா்கள் இருவரும், கடந்த 29-ஆம் தேதி அரசு தோ்வு எழுதுவதற்காக சென்னை வந்தனா். பெரியமேடு கடப்பா ரெங்கய்யா தெருவில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் இருவரும் தங்கினா். அந்த அறைக் கதவு திறக்கப்படாமலேயே இருந்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்த அறையில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக விடுதி ஊழியா்கள் பெரியமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று, அறைக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, இருவரும் அந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரது சடலங்களையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இறந்தவா்களின் குடும்பத்தில் பிரச்னை இருந்தும், இதனால் தாய் உமாதேவியுடன் சோ்ந்து இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருப்பதும், அதில் தாய் இறந்துவிட்ட நிலையில், மகன்கள் இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதனால், மன உளைச்சலில் இருவரும், பெரியமேடு விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.