ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
போடி அருகே தனியாா் வாகன ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே தனியாா் வாகன ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டியைச் சோ்ந்தவா் வனராஜ் மகன் அருண் (27). தனியாா் வாகன ஓட்டுநா். இவரது தாய் இறந்து விட்ட நிலையில், தந்தை வனராஜ், சகோதரி பிரியா ஆகியோருடன் வசித்து வந்தாா். அருண் மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.