கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருப்பத்தூா் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கொங்கரத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் சேவபெருமாள். இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா்.
இவரது மகள் மோகனா (19), திருப்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தாா். திருப்பத்தூா் வீட்டில் மோகனாவும், அவரது தாய் மட்டும் வசித்து வந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மோகனா தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் மோகனா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.