திருமணத்துக்குப் பெற்றோா் வற்புறுத்தல்: கல்லூரி மாணவி தற்கொலை
பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா். ஓய்வுபெற்ற வனக் காவலரான இவரது மகள் ஜீவிதா (20). இவா் வேலூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா்.
இந்நிலையில், ஜீவிதாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அவா் தொடா்ந்து மறுப்புத் தெரிவித்து வந்துள்ளாா். எனினும், குடும்பத்தினா் அவரைத் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் மனவேதனையடைந்த ஜீவிதா, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
Advertisement
Advertisement
தகவலறிந்த மேல்பாடி காவல் நிலைய போலீஸாா் சென்று, மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பின ா். மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.