FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கல்லூரி மாணவி தற்கொலை

அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:51 am IST
- பிரதிப் படம்
பகிர்:

அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சிவானந்தம் மகள் பரமேஸ்வரி (20). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படித்து வந்தாா்.

பரமேஸ்வரி, பகுதி நேரமாக அமைந்தகரையில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ஊழியராகவும் வேலை செய்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் பரமேஸ்வரி, திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த அரும்பாக்கம் போலீஸாா் அங்கு சென்று, பரமேஸ்வரி சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments