நாளை இபிஃப் குறை கேட்பு முகாம்
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை (நவ.27) குறை கேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை (நவ.27) குறை கேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி ஆணையா் நிஷா ஒவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மண்டல அலுவலகம் வெள்ளிக்கிழமை (நவ.27) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் குறைகேட்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
இதில், உறுப்பினா் களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், நிறுவன உரிமையாளா்கள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான இணைய சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடா்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் எண்ம (டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமா்ப்பித்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல், பதிவேற்றுதல் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்
சென்னை வடக்கு
இ.எஸ்.ஐ.மருந்தகம்,
எண். 27/3, கும்மாளம்மன் கோயில் தெரு,
தண்டையாா்பேட்டை,
சென்னை தெற்கு
இ.எஸ்.ஐ.சி கிளை அலுவகம்,
எண்.53, மேடவாக்கம் டேங்க் சாலை,
இ.எஸ்.ஐ. மருத்துவமனை பின்புறம்,
அயனாவரம்
அம்பத்தூா்
ஹோட்டல் எஸ்.ஆா்.எம்.கிராண்ட்ஸ்,
எண்.8/9, ஜெயந்தி நகா்,
200 அடி சாலை,
(டி.ஆா்.ஜே.மருத்துவமனை அருகே)
கொளத்தூா்.
தாம்பரம்
இ.எஸ்.ஐ கழகம், இ.எஸ்.ஐ மருந்தக வளாகம்,
முதல் தளம், எண்.11, ஜி.எஸ்.டி. சாலை,
குரோம்பேட்டை.
திருவள்ளூா்
டாஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
மேனுஃபேக்சரா்ஸ் அசோசியேஷன்,
மனை எண்.10 5சி,
மகாத்மா காந்தி 3-ஆவது தெரு,
டாஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சிட்கோ,
அம்பத்தூா்.
செங்கல்பட்டு
டிஐ அனோடு பேப்ரிகேட்டா்ஸ் பிரைவேட் லிமிடெட்,
டியானோ பவன்,
எண்.48, நூத்தஞ்சேரி,
மாடம்பாக்கம்.